சேலத்தில் கனரா வங்கி சார்பில் அரசு ஊழியர்களுடன் கலந்துரையாடல்

சேலம்: சேலம், ஜெய்ராம் கலை மற்றும் அறிவியல் கல்-லுாரியில், கனரா வங்கி சார்பில், அரசு ஊழியர்க-ளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடத்-தப்பட்டது. கனரா வங்கி மண்டல மேலாளர் ஹனிஷ்பாபு
பேசியதாவது:

அரசு ஊழியர்களுக்கான மாதாந்திர சம்பள கணக்கு திட்டங்கள் வைத்துள்ள, தேசிய மயமாக்-கப்பட்ட வங்கிகளில், கனரா வங்கி மற்ற வங்கி-களை காட்டிலும், அரசு ஊழியர்கள், பெண்கள், குறிப்பாக ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் சலுகை அளிக்கிறது. சேலம் மண்டலத்தில், 61 கனரா வங்கி கிளை உள்ளது. சேலம் மாவட்-டத்தில், 52 கிளைகளும், மாநகரில், 17 கிளை-களும்உள்ளது.
இவற்றில் கணக்கு வைத்துள்ள அனைவருக்கும், 10 லட்சம் வரை காப்பீடு மற்றும் 1 கோடி ரூபாய்க்கான விபத்து காப்பீடு இலவசமாக வழங்கப்படுகிறது. மற்ற வங்கிகளை விட வீட்-டுக்கடன் வட்டி, 7.40 சதவீதம் மட்டுமே. இது தவிர கனரா வங்கியின் 'ஆல் இன் ஒன்' செயலி மூலம், அனைத்து பண பரிவர்த்தனைகளையும் எளிதாக செய்ய
முடியும்.
இவ்வாறு பேசினார்.
நிகழ்ச்சியில், கனரா வங்கி மேலாளர்கள் நரேஷ்-பாபு, பாலாஜி, பத்மநாபன் ஆகியோர் பங்கேற்-றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கனரா வங்கியுடன் இணைந்து, தி ட்ரு சாய் ஒர்க்ஸ், விஜய் ராசி கன்ஸ்ட்ரக்சன், அஸ்வின் ஸ்வீட்ஸ் செய்திருந்-தனர். நிகழ்ச்சியின் மீடியா பார்ட்டனராக, 'காலைக்கதிர்' நாளிதழ் செயல்பட்டது.

Advertisement