கோவில் திருவிழா தொடர்பாக இரு தரப்பினர் இடையே பேச்சுவார்த்தை
ஆத்துார்: கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக, இரு-தரப்பினர் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
ஆத்துார் அருகே, செல்லியம்பாளையம் கிரா-மத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோ-விலில், தேர்த்திருவிழா நடத்துவது தொடர்பாக, இருதரப்பினர் இடையே பிரச்னை எழுந்தது. இரு-தரப்பினரும், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதி-மன்றம், தாசில்தார் முன்னிலையில் விழாவை அமைதியான முறையில் நடத்த வேண்டும் என, கடந்த, 7ல், உத்தரவிட்டது. இந்த உத்தரவு தொடர்பாக நேற்று, இருதரப்பினரையும் தனித்த-னியாக அழைத்து, ஆத்துார் தாலுகா அலுவல-கத்தில், தாசில்தார் நல்லுசாமி தலைமையில் போலீசார் பாதுகாப்புடன்
பேச்சுவார்த்தை நடந்தது.
ஒரு தரப்பினர், 'கோவில் திருவிழா, 36 ஆண்டுக-ளாக நடத்தி வருகிறோம். பாரம்பரியமாக நடத்தி வந்தது போல் மீண்டும் நடத்த அனுமதிக்க வேண்டும். மற்றொரு தரப்பினரும், விழாவுக்கு வரலாம். திருவிழா நடத்துவதற்கு தான், நீதிமன்-றத்தில் வழக்கு தொடர்ந்து, உத்தரவு பெற்று வந்-துள்ளோம்' என்றனர்.மற்றொரு தரப்பினர், 'குழு நியமித்து, திருவிழா நடத்த வேண்டும்' என, வலியுறுத்தினர். தாசில்தார், 'திரு
விழாவில், இரு தரப்பிலும் தலா இருவர் கொண்ட குழு நியமித்து நடத்தலாம்' என்றார். இதற்கு, ஒரு தரப்பினர் ஒப்புக்கொள்ளாமல், பாரம்பரிய வழக்கத்தின்படி திருவிழா நடத்த வேண்டும் என்றனர். இதனால், பேச்சுவார்த்-தையில் உடன்பாடு ஏற்படாததால், இருதரப்பி-னரும் அங்கிருந்து சென்றனர்.
மேலும்
-
வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி வழக்கு; தள்ளுபடி செய்தது ஐகோர்ட்
-
இலங்கை தமிழர் சிவராசாவுக்கு விதித்த மரண தண்டனை; ரத்து செய்தது சவுதி அரேபியா
-
‘உடம்பில் சக்தி இருக்கும் வரை உழைப்பேன்!’
-
சவுதியில் தொடரும் பதற்றம்; இந்தியர்களுக்கு உதவி எண் அறிவிப்பு
-
'பணி சிறக்கட்டும்' ; ஐகோர்ட் புதிய நீதிபதிகளுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து
-
தொடர்ந்த சரியும் தங்கம் விலை; 3 நாளில் மட்டும் ரூ.2,320 குறைவு