சாலையில் குட்டையாக தேங்கிய கழிவுநீர் கண்டுகொள்ளாத ஓசூர் ஒன்றிய அதிகாரிகள்
ஓசூர்: ஓசூர் அருகே, பிரதான சாலையில் குட்டைபோல் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசிய போதும், ஒன்-றிய அலுவலக அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.
ஓசூர் குமுதேப்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சா-லையிலிருந்து பிரிந்து, ராயல் வெல்பிட் வழி-யாக, திப்பாளம் கிராமத்திற்கு தார்ச்சாலை செல்-கிறது. இச்சாலையின் துவக்கத்தில், அசோக் லேலண்ட் லாரிகள் நிறுத்தும் யார்டு அருகே சாலை வளைவில், கழிவு நீர் குட்டை போல் மாதக்கணக்கில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.
ஓசூர், பி.டி.ஓ., அலுவலக அதிகாரிகள், தொரப்-பள்ளி அக்ரஹாரம் பஞ்., நிர்வாகம் கண்டுகொள்-ளாமல் உள்ளதால், கொசுக்கள் உற்பத்தியாகி, அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இச்சாலை வழியாக தினமும் பல ஆயிரம் வாகனங்கள் செல்கின்றன. இந்திய மருத்துவ சங்கத்தின் ஓசூர் கிளை அலுவலகத்-திற்கு, இச்
சாலையில் தான் டாக்டர்கள் பயணிக்கின்றனர்.
தனியார் கட்டடங்களிலிருந்து வெளியேறி சாலையில் தேங்கும் கழிவு நீர், அவ்வழியாக வாகனங்கள் செல்லும் போது, பாத
சாரிகள் மீது தெறிக்கிறது. சுகாதார சீர்கேடு ஏற்-பட்டுள்ளதால், பி.டி.ஓ., அலுவலக அதிகாரிகள் மற்றும் பஞ்., நிர்வாகம், தனியார் கட்டடத்திலி-ருந்து வெளியேறி தேங்கி நிற்கும் கழிவு நீரை அகற்றுவதுடன், மீண்டும் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொது-மக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை
விடுத்துள்ளனர்
மேலும்
-
இலங்கை தமிழர் சிவராசாவுக்கு விதித்த மரண தண்டனை; ரத்து செய்தது சவுதி அரேபியா
-
‘உடம்பில் சக்தி இருக்கும் வரை உழைப்பேன்!’
-
சவுதியில் தொடரும் பதற்றம்; இந்தியர்களுக்கு உதவி எண் அறிவிப்பு
-
'பணி சிறக்கட்டும்' ; ஐகோர்ட் புதிய நீதிபதிகளுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து
-
தொடர்ந்த சரியும் தங்கம் விலை; 3 நாளில் மட்டும் ரூ.2,320 குறைவு
-
அமைச்சர் நிர்மல் குமாருக்கு ரூ.1 கேட்டு நோட்டீஸ் அனுப்பியது அதிமுக