வி.எம்.ஜே., பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன்

மதுரை: இதயம் ராஜேந்திரன் பள்ளியில் நடந்த கலைத்திறன் போட்டியில், வி.எம்.ஜே., பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.

11வது பி.வி. ஆல்பா கலைத்திறன் போட்டிகள், இதயம் ராஜேந்திரன் பள்ளியில் நடந்தது. இதில் மதுரையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, 43 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.

போட்டிகள் அனைத்திலும் அசத்தலான திறமையை வெளிப்படுத்திய மதுரை வி.எம்.ஜே., பள்ளி மாணவர்கள், முதலிடம் பிடித்து 'ஒட்டுமொத்த சாம்பியன்' பட்டத்தை வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பை பரிசளிக்கப்பட்டது. மாணவர்களையும், பயிற்சியளித்த ஆசிரியர்களையும் பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.

Advertisement