இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7 சதவீதமாக உயரும்; ஐஎம்எப் கணிப்பு
புதுடில்லி: "2027-28ம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி 7 சதவீதமாக உயரும்" என சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எப்) கணித்து உள்ளது.
ஐ.எம்.எப்., வெளியிட்டுள்ள புதிய பொருளாதார மதிப்பீட்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் (ஜிடிபி) 2026-27 நிதியாண்டில் 7 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக ஜூலை மாத அறிக்கையில், 6.4% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது உயர்வை கண்டுள்ளது.
அதன் அறிக்கை: எரிசக்தி மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்வு காரணமாகப் பணவீக்கம் 4.7% அளவை எட்டும்; பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் மற்றும் உள்நாட்டு தேவை தொடர்ந்து வலுவாக இருப்பதால், அடுத்த நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் வலுவான வளர்ச்சியை எட்டும். உலகின் அதிவேகமாக வளரும் முக்கியப் பொருளாதார நாடாக இந்தியா தொடர்ந்து நீடிக்கிறது.
உலகப் பொருளாதார வளர்ச்சி 2026ல் 3.1% ஆகவும், 2027ல் 3.4% ஆகவும் இருக்கும். செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்ப முதலீடுகள் உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு பக்கபலமாக இருக்கிறது.
உலகப் பொருளாதாரம் மீண்டெழுந்து வந்தாலும், அதன் வளர்ச்சி சீரற்றதாகவே காணப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வாசகர் கருத்து (2)
வட்டிச்சாமி - ,
13 அக்,2026 - 15:29 Report Abuse
நல்லா உசுப்பேத்துங்கோ.. நிறைய கடன் குடுங்கோ 0
0
Reply
Kasimani Baskaran - Singapore,இந்தியா
13 அக்,2026 - 09:59 Report Abuse
அந்த தீம்க்கா நிபுணர் வக்கீல் சொன்னால்தான் நாங்கள் நம்புவோம். 0
0
Reply
மேலும்
-
இலங்கை தமிழர் சிவராசாவுக்கு விதித்த மரண தண்டனை; ரத்து செய்தது சவுதி அரேபியா
-
‘உடம்பில் சக்தி இருக்கும் வரை உழைப்பேன்!’
-
சவுதியில் தொடரும் பதற்றம்; இந்தியர்களுக்கு உதவி எண் அறிவிப்பு
-
'பணி சிறக்கட்டும்' ; ஐகோர்ட் புதிய நீதிபதிகளுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து
-
தொடர்ந்த சரியும் தங்கம் விலை; 3 நாளில் மட்டும் ரூ.2,320 குறைவு
-
அமைச்சர் நிர்மல் குமாருக்கு ரூ.1 கேட்டு நோட்டீஸ் அனுப்பியது அதிமுக
Advertisement
Advertisement