உள்ளாட்சி தேர்தலில் வீ த லீடர்ஸ் அமைப்பு போட்டியிடும்: அண்ணாமலை
- நமது நிருபர்-
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே 15,000 மரக்கன்றுகளை நடும்பணியை தொடங்கி வைத்த பிறகு வீ த லீடர்ஸ் அமைப்பின் அண்ணாமலை பேசியதாவது:
வீ த லீடர்ஸ் அமைப்பு அரசியல் கட்சியாக மாறும்போது, இதுபோன்ற கட்சிக்காக தான் காத்திருந்தோம் என சொல்வீர்கள். இதுபோன்ற தலைவர்கள் வேண்டும். 234 தொகுதிகளுக்கும் தலைவர்கள் வேண்டும். பல தலைவர்கள் வேண்டும். 12,525 பஞ்சாயத்து தலைவர்கள் வேண்டும். 8 லட்சத்திற்கும் மேற்பட்ட பஞ்சாயத்து கவுன்சிலர்கள் உள்ளனர். உருவாக்க நேரம் வேண்டும். அந்த வேலையை தலைவர்கள் செய்கின்றனர்.
உங்கள் அன்பை பெற்று, வரக்கூடிய உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோம். தமிழக அரசு அறிவிக்கும்போது உள்ளாட்சி தேர்தலில் நிற்போம்.ஒவ்வொரு கிராமத்திலும் மாற்றத்தை கொண்டு வருவோம். அடுத்த நடக்கும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவோம். உள்ளாட்சி முதல் சட்டசபை வரை வீ த லீடர்ஸ் ,அரசியல் இயக்கம் மாற்றத்தை கொடுக்க வேண்டும்.
மன்னார்குடி எம்எல்ஏவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தேன். இடைத்தேர்தல் நடந்த தாராபுரம் தொகுதியில் வேட்பாளருக்கு ஆதரவாக பேசினேன். இன்றைய மன்னார்குடி எம்எல்ஏ எந்த கட்சிக்கு ஓட்டு போட்டோமோ அந்த கட்சியில் இல்லை . மாற்றுக் கட்சியில் இல்லை. தனியாக இருக்கிறார். மேடையில் வாய் கிழிய பேசி இருக்கிறோம். பாதத்தை தொட்டு ஓட்டு போடுங்கள் என கேட்டு இருக்கிறோம்.
3 மாதத்தில், கையில் இருக்கும் மை இன்னும் காயவில்லை. அதற்குள் வேட்டி, கட்சி, ஆட்சி மாறிவிட்டது. பேசின வாயும் மாறியாச்சு. இந்த அரசியலை உடைக்க வேண்டும் என்பதற்காக தான் வீ த லீடர்ஸ் களத்தில் இருக்கிறது. இந்த அரசியலை மாற்ற வேண்டும்.
இதுபோன்ற மோசமான அரசியலை நாமும், நமது தலைவர்களும், தன்னார்வலர்களும் நாமும் செய்யக்கூடாது. இந்த அரசியலை ஆழமாக பார்த்துவிட்டோம். இதனால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை என உணர்ந்துவிட்டோம்.இடைத்தேர்தலில் வீதி வீதியாக வந்து பிரசாரம் செய்த தலைவர்கள் தினமும் நமது வீட்டிற்கு வந்து பிரச்னையை கேட்பார்களா என்றால் இல்லை. அடிப்படை பிரச்னைகளை தீர்க்க உள்ளூரில் தலைவர்களை உருவாக்க வேண்டும். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பணியாற்ற வைக்க வேண்டும். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.
வெற்றி கிடைக்கட்டும் ....
வாழ்த்துக்கள் நாம் அனைவரும் வளமுடன் வாழ்வோம் நலமுடன் வாழ்வோம் தொடரட்டும் உங்கள் சமுதாயப் பணி
Annamalais this approach is called ing the water.
சீமான் நிரந்தரமாக கடைசி இடத்தை பிடிக்கும்படி மலையாரது வருகை இருக்கவேண்டும்,
அப்பத்துக்கு மதம் மாறிய பிரியனே நீ எப்போது தாய் மதத்துக்கு திரும்ப போற...
REAL HERO
Excellent approach digging from route
நாளைய சரித்திரம் உன் பெயர் சொல்லும்.
super
சபாஷ். காத்திருக்கிறோம்...
மன்னார்குடி எம்.எல்.ஏவும், தாராபுரம் எம்.எல்.ஏவும் கட்சி மாறியதை எப்போது கண்டிக்கிறார்? மறு தேர்தலும் தாராபுரத்தில் நடந்து முடிந்து அதே நபரே எம்.எல்.ஏவாக மீண்டும் பதவி ஏற்ற பின்னரா? அப்படியென்றால் இது இவரின் யாருக்கு ஆதரவான மறைமுகமான நிலைப்பாடு?மேலும்
-
வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி வழக்கு; தள்ளுபடி செய்தது ஐகோர்ட்
-
இலங்கை தமிழர் சிவராசாவுக்கு விதித்த மரண தண்டனை; ரத்து செய்தது சவுதி அரேபியா
-
‘உடம்பில் சக்தி இருக்கும் வரை உழைப்பேன்!’
-
சவுதியில் தொடரும் பதற்றம்; இந்தியர்களுக்கு உதவி எண் அறிவிப்பு
-
'பணி சிறக்கட்டும்' ; ஐகோர்ட் புதிய நீதிபதிகளுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து
-
தொடர்ந்த சரியும் தங்கம் விலை; 3 நாளில் மட்டும் ரூ.2,320 குறைவு