டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு
கள்ளக்குறிச்சி: தியாகதுருகம் அடுத்த பிரிதிவிமங்கலம் அண்ணா நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
மனு விபரம்:
பிரிதிவிமங்கலம் அண்ணா நகர் பகுதியில் புறவழிச்சாலையில் உள்ள குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு மதுபாட்டில் வாங்க வருபவர்கள் பொது இடங்களில் அமர்ந்து மது அருந்தி, அவ்வழியாகச் செல்லும் பெண்களை கிண்டல் செய்வது, ஆபாசமாக பேசுவது, கூச்சலிடுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர்.
மேலும், வாகனங்களை சாலையிலேயே நிறுத்திச் செல்வதால் தினமும் விபத்து ஏற்படுகிறது. குறிப்பாக, டாஸ்மாக் கடைக்கு அருகிலேயே மசூதி உள்ளது. எனவே, அண்ணாநகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.
கடையை அகற்றும் வரை பொது இடங்களில் அமர்ந்து மது அருந்துவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பெண்களை கிண்டல் செய்பவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுப்பதுடன், இரவு நேரங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி வழக்கு; தள்ளுபடி செய்தது ஐகோர்ட்
-
இலங்கை தமிழர் சிவராசாவுக்கு விதித்த மரண தண்டனை; ரத்து செய்தது சவுதி அரேபியா
-
‘உடம்பில் சக்தி இருக்கும் வரை உழைப்பேன்!’
-
சவுதியில் தொடரும் பதற்றம்; இந்தியர்களுக்கு உதவி எண் அறிவிப்பு
-
'பணி சிறக்கட்டும்' ; ஐகோர்ட் புதிய நீதிபதிகளுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து
-
தொடர்ந்த சரியும் தங்கம் விலை; 3 நாளில் மட்டும் ரூ.2,320 குறைவு