கள்ளக்குறிச்சியில் சேம்பர் ஆப் காமர்ஸ் ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் யு.பி.ஐ.க்கான சேவை வரியை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு எனும் சேம்பர் ஆப் காமர்ஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சேம்பர் ஆப் காமர்ஸ் கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்ட தலைவர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் அனைத்து பொருட்களின் மீதும் கூடுதல் விலையேற்றத்திற்கு வழிவழக்கும் யு.பி.ஐ. பரிவர்த்தனை கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். யு.பி.ஐ.க்கான சேவை வரி அகற்ற வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மாவட்டச் செயலாளர் முத்து, பொருளாளர் மதியழகன், மாநில துணைத் தலைவர் வரதராஜூ, இணைச் செயலாளர் குமரகுருபரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மணிவண்ணன், பொருளாளர் பழனி உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி வழக்கு; தள்ளுபடி செய்தது ஐகோர்ட்
-
இலங்கை தமிழர் சிவராசாவுக்கு விதித்த மரண தண்டனை; ரத்து செய்தது சவுதி அரேபியா
-
‘உடம்பில் சக்தி இருக்கும் வரை உழைப்பேன்!’
-
சவுதியில் தொடரும் பதற்றம்; இந்தியர்களுக்கு உதவி எண் அறிவிப்பு
-
'பணி சிறக்கட்டும்' ; ஐகோர்ட் புதிய நீதிபதிகளுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து
-
தொடர்ந்த சரியும் தங்கம் விலை; 3 நாளில் மட்டும் ரூ.2,320 குறைவு
Advertisement
Advertisement