ஓவிய போட்டி: பரிசளிப்பு விழா

பண்ருட்டி: பண்ருட்டி ஐஸ்வர்யா ேஹாம் நீட்ஸ் சார்பில் சிறுவர்களுக்கான ஒவிய போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

பண்ருட்டி ஐஸ்வர்யா ேஹாம்நீட்ஸ் சார்பில் சிறுவர்களுக்கான ஒவிய போட்டி நடந்தது. 'சுதந்திரம் என் பார்வையில்' என்ற தலைப்பில் நடந்த போட்டியில் 5 முதல் 10 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் பங்கேற்றனர்.

தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவிற்கு, ஐஸ்வர்யா ேஹாம்நீட்ஸ் உரிமையாளர் ராஜ்மோகன், போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு முறையே டி.வி., கிரைண்டர் மற்றும் மிக்சி வழங்கினார். மேலும், போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கினார்.

Advertisement