வள்ளலார் மன்றத்தில் கூட்டு பிரார்த்தனை

சங்கராபுரம்: சங்கராபுரம் வள்ளலார் மன்றத்தில் கூட்டு பிரார்த்தனை நிகழ்ச்சி நடந்தது.

விமானத்தில் சக விமானியால் தாக்கப்பட்டு காயமடைந்த விமானி ஸ்மித் மச்சார் பூரண குணமடைய சிறப்பு பிரார்த்தனை நடந்தது. நிகழ்ச்சிக்கு, வள்ளலார் மன்ற பொருளாளர் முத்துக்கருப்பன் தலைமை தாங்கினார். மன்ற செயலாளர் ராதாகிருஷ்ணன், துணைத் தலைவர் சந்திரசேகர், குறிஞ்சி தமிழ்ச் சங்க செயலாளர் சக்திவேல் முன்னிலை வகித்தனர். திருக்குறள் நகர பேரவை செயலாளர் லட்சுமிபதி வரவேற்றார்.

கள்ளக்குறிச்சி பேச்சாளர் சாந்தகுமார் விமானியின் வீர தீர செயல்களை மாணவர்களிடையே பேசினார்.

பொது சேவை கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் குசேலன், சாதிக், வள்ளலார் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

வள்ளலார் பள்ளி தலைமை ஆசிரியை குமாரி நன்றி கூறினார்.

Advertisement