காட்டனந்தல் – எரவார் சாலை ஜல்லிகள் பெயர்ந்து சேதம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலியில் காட்டனந்தல் – எரவார் சாலை ஜல்லிகள் பெயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலியில் உள்ள காட்டனந்தல் – எரவார் செல்லும் சாலை வழியாக பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் வாகனங்கள், பொதுமக்கள் அதிகளவில் சென்று வருகின்றனர்.

இச்சாலை சேதமடைந்து ஜல்லிகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக மாறி போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் காணப்படுகிறது.

அத்துடன் இந்த சாலையில் உள்ள மெகா சைஸ் பள்ளங்களில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயமடைகின்றனர்.

இதனால், மாணவர்கள், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே, சேதமடைந்த இச்சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement