விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் : முதல்வரிடம் அ.தி.மு.க,. மனு
புதுச்சேரி: புதுச்சேரியில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவேண்டும் என அ.தி.மு.க,. வலியுருத்தி உள்ளது.
இது குறித்து புதுச்சேரி அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன், முதல்வர் ரங்கசாமியை நேரில் சந்தித்து, அவரிடம் அளித்துள்ள மனு:
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த நான்கு மாதங்களில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக, கடந்த ஜூன் மாதத்தில் ரூ.1100க்கு விற்கப்பட்ட ஒரு மூட்டை அரிசியின் விலை இன்று ரூ.700 உயர்ந்து ரூ.1800-க்கு விற்கப்படுகிறது.
ரூ. 900க்கு விற்கப்பட்ட ஒரு மூட்டை இட்லி அரிசி ரூ.300 உயர்ந்து ரூ.1,200-க்கும், ரூ.120க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.40 உயர்ந்து ரூ.160-க்கும், ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் ரூ.130ல் இருந்து ரூ.180க்கும், ரூ.120க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ உளுத்தம் பருப்பு ரூ.30 உயர்ந்து ரூ.150-க்கும், ரூ.180-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ பூண்டு ரூ.340க்கு விற்கப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழை எளிய மக்களின் நலன் கருதி, விலைவாசியைக் கட்டுப்படுத்த துறை ரீதியான உயர் அதிகாரிகள் மற்றும் அனைத்து மொத்த வியாபாரிகளையும் அழைத்து விலையேற்றத்தைக் கட்டுப்படுத்திட முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
இலங்கை தமிழர் சிவராசாவுக்கு விதித்த மரண தண்டனை; ரத்து செய்தது சவுதி அரேபியா
-
‘உடம்பில் சக்தி இருக்கும் வரை உழைப்பேன்!’
-
சவுதியில் தொடரும் பதற்றம்; இந்தியர்களுக்கு உதவி எண் அறிவிப்பு
-
'பணி சிறக்கட்டும்' ; ஐகோர்ட் புதிய நீதிபதிகளுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து
-
தொடர்ந்த சரியும் தங்கம் விலை; 3 நாளில் மட்டும் ரூ.2,320 குறைவு
-
அமைச்சர் நிர்மல் குமாருக்கு ரூ.1 கேட்டு நோட்டீஸ் அனுப்பியது அதிமுக