மனைவி மாயம் கணவர் புகார்

பண்ருட்டி: மனைவியை காணவில்லை என கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

பண்ருட்டி அடுத்த புலவனுார் பி.கே.என்.நகரைச் சேர்ந்தவர் பாக்கியராஜ் மகன் தவசி,25; டைல்ஸ் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஷாலினி,22; திருமணமாகி 4 ஆண்டாகும் இவர்களுக்கு இரண்டரை வயதில் மகன் உள்ளார்.

இந்நிலையில், தம்பதிக்குள் குடும்ப பிரச்னை காரணமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது.இதனால், கடந்த 11ம் தேதி மாலை 5 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்ற ஷாலினி வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து தவசி அளித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து, ஷாலினியை தேடி வருகின்றனர்.

Advertisement