மின்வாரியத்தினர் ஆர்ப்பாட்டம்
கூடலுார்: மின்வாரியத்தில் தனியார் கூட்டாண்மை திட்டத்தை கண்டித்து லோயர்கேம்ப் பெரியாறு நீர் மின் நிலைய தொழிற்சங்க கூட்டுக்குழு சார்பில் லோயர்கேம்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மின்வாரியத்தில் தனியார் பங்களிப்பு அதிகரிப்பதால் பொதுத்துறை நிறுவனத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்படுவதுடன் எதிர்காலத்தில் மின்சார உற்பத்தி, விநியோகப் பணிகளில் தனியார் நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகரிக்க கூடும் என தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் மின்வாரிய ஊழியர்களின் பணி பாதுகாப்பு, புதிய வேலைவாய்ப்புகள், ஓய்வூதிய பலன்கள், ஊதியம் உள்ளிட்ட உரிமைகள் பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர். நிர்வாகிகள் சித்திரகுமார், சிவக்குமார், ராஜன், செல்வம், சேகர் ரவி, ராமசுப்பு, ராமபாலன், ராமமூர்த்தி, சுனில் குமார், வடிவேல், இசக்கி பாண்டியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
இலங்கை தமிழர் சிவராசாவுக்கு விதித்த மரண தண்டனை; ரத்து செய்தது சவுதி அரேபியா
-
‘உடம்பில் சக்தி இருக்கும் வரை உழைப்பேன்!’
-
சவுதியில் தொடரும் பதற்றம்; இந்தியர்களுக்கு உதவி எண் அறிவிப்பு
-
'பணி சிறக்கட்டும்' ; ஐகோர்ட் புதிய நீதிபதிகளுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து
-
தொடர்ந்த சரியும் தங்கம் விலை; 3 நாளில் மட்டும் ரூ.2,320 குறைவு
-
அமைச்சர் நிர்மல் குமாருக்கு ரூ.1 கேட்டு நோட்டீஸ் அனுப்பியது அதிமுக