ஆடு மேய்க்கும் தொழிலாளி வீட்டிற்கு ரூ. 10 ஆயிரத்து 938 மின் கட்டணம்: 20 நாட்களாக இருளில் வசிக்கும் குடும்பம்
ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் அருகே ஆடு மேய்க்கும் தொழிலாளியின் வீட்டிற்கு ரூ.10,938 மின் கட்டணம் வந்தது. அதை அவர் செலுத்தாததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு 20 நாட்களாக குடும்பத்தினர் இருளில் தவிக்கின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மல்லி ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் 51. இவரது வீட்டிற்கு ஒவ்வொரு முறையும் ரூ.100 வரை மட்டுமே மின் கட்டணம் வந்தது. இரு மாதங்களுக்கு முன் ரூ. 700 மின்கட்டணம் வந்தது. செப்., மாதம் மின்வாரிய ஊழியர்கள் கணக்கெடுத்த போது மின் கட்டணமாக
ரூ. 10,938 வந்தது. இந்தத் தொகையை அவரால் கட்ட முடியாத சூழலில் செப்.22-ல் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் தற்போது வரை மின்சாரம் இல்லாமல் அவரது குடும்பத்தினர் இருளில் வசிக்கின்றனர்.
இந்நிலையில் மின்வாரிய தலைமை அலுவலகத்திற்கு ராஜேந்திரன் புகார் கொடுத்தார். நேற்று காலை அவரது வீட்டிற்கு வந்த மின் ஊழியர்கள், மீட்டரை கழற்றி ஆய்விற்காக எடுத்துச் சென்றனர். ராஜேந்திரன் கூறுகையில், தனது வீட்டில் எவ்வித மின்சாதன பொருட்களும் இல்லாத நிலையில் கடந்தமுறை ரூ.700 மின்கட்டணம் வந்தது. தற்போது ரூ.10 ஆயிரம் வந்துள்ளது, என்றார்.
மேலும்
-
இலங்கை தமிழர் சிவராசாவுக்கு விதித்த மரண தண்டனை; ரத்து செய்தது சவுதி அரேபியா
-
‘உடம்பில் சக்தி இருக்கும் வரை உழைப்பேன்!’
-
சவுதியில் தொடரும் பதற்றம்; இந்தியர்களுக்கு உதவி எண் அறிவிப்பு
-
'பணி சிறக்கட்டும்' ; ஐகோர்ட் புதிய நீதிபதிகளுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து
-
தொடர்ந்த சரியும் தங்கம் விலை; 3 நாளில் மட்டும் ரூ.2,320 குறைவு
-
அமைச்சர் நிர்மல் குமாருக்கு ரூ.1 கேட்டு நோட்டீஸ் அனுப்பியது அதிமுக