கொலை வழக்கில்மேலும் ஒருவர் கைது
பண்ருட்டி: சண்டையை விலக்கி விட்டவரை தாக்கி கொலை செய்த வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி அடுத்த மேல்கவரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது குடும்பத்திற்கும், கீழ்கவரப்பட்டில் வசிக்கும் இவரது அக்கா கன்னியாகுமரி குடும்பத்திற்கும் இடையே முன்விரோதம் உள்ளது. இந்நிலையில் மூர்த்தி மகன் விக்னேஷ், கன்னியாகுமரி மகன் தேவ் ஆகியோருக்கும் கடந்த கடந்த 16 ம் தேதி கடலுாரில் தகராறு ஏற்பட்டது.
வீடு திரும்பிய விக்னேஷ் தனது பெற்றோருடன் கீழ்கவரப்பட்டிற்கு சென்று தனது அத்தையிடம் நியாம் கேட்டார். அதில், இரு குடும்பத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறை விலக்கிவிட முயன்ற அதே கிராமத்தை சேர்ந்த ராமு,45; வை மேல்கவரப்பட்டு கிராமத்தினர் தாக்கியதில் அவர் இறந்தார்.
இதுகுறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து விக்னேஷ்,24; உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர். மேலும், இருவரை தேடிவந்தனர். அதில,் முருகன் மகன் விக்னேஷ்,23; என்பவரை நேற்று கைது செய்தனா கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும்
-
இலங்கை தமிழர் சிவராசாவுக்கு விதித்த மரண தண்டனை; ரத்து செய்தது சவுதி அரேபியா
-
‘உடம்பில் சக்தி இருக்கும் வரை உழைப்பேன்!’
-
சவுதியில் தொடரும் பதற்றம்; இந்தியர்களுக்கு உதவி எண் அறிவிப்பு
-
'பணி சிறக்கட்டும்' ; ஐகோர்ட் புதிய நீதிபதிகளுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து
-
தொடர்ந்த சரியும் தங்கம் விலை; 3 நாளில் மட்டும் ரூ.2,320 குறைவு
-
அமைச்சர் நிர்மல் குமாருக்கு ரூ.1 கேட்டு நோட்டீஸ் அனுப்பியது அதிமுக