தாசில்தார், சார் பதிவாளருக்கு ‘பிடிவாரண்ட்’ திட்டக்குடி சப் கோர்ட் நீதிபதி அதிரடி
திட்டக்குடி: அரசு நிலத்திற்கு பட்டா வழங்கிய வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராகாத தாசில்தார், சார் பதிவாளருக்கு ‘பிடிவாரண்ட்’ பிறப்பிக்கப் பட்டுள்ளது.
கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த மேல் ஆதனுாரைச் சேர்ந்தவர் குணசேகரன். அதே பகுதியில் உள்ள அரசு நிலத்தை கடந்த 2024ல் பட்டா வழங்கி, பதிவு செய்யப்பட்டுள்ளதாக திட்டக்குடி தாசில்தார் மற்றும் தொழுதுார் சார் பதிவாளர் உட்பட 8 பேர் மீது திட்டக்குடி சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கில் நேற்று ஆஜராகுமாறு தாசில்தார், சார் பதிவாளர், வருவாய் ஆய்வாளர், வி.ஏ.ஓ., ஆகியோருக்கு சம்மன் வழங்கப்பட்டது. ஆனால் வருவாய் ஆய்வாளர், வி.ஏ.ஓ., இருவரும் ஆஜராகினர். ஆனால் சம்மனை பெற்றுக் கொண்டு ஆஜராகாத தாசில்தார், சார் பதிவாளர் இருவருக்கும் சார்பு நீதிமன்ற நீதிபதி, ‘பிடிவாரண்ட்’ பிறப்பித்து, வழக்கு வரும் நவம்பர் 4ம் தேதி ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
மேலும்
-
இலங்கை தமிழர் சிவராசாவுக்கு விதித்த மரண தண்டனை; ரத்து செய்தது சவுதி அரேபியா
-
‘உடம்பில் சக்தி இருக்கும் வரை உழைப்பேன்!’
-
சவுதியில் தொடரும் பதற்றம்; இந்தியர்களுக்கு உதவி எண் அறிவிப்பு
-
'பணி சிறக்கட்டும்' ; ஐகோர்ட் புதிய நீதிபதிகளுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து
-
தொடர்ந்த சரியும் தங்கம் விலை; 3 நாளில் மட்டும் ரூ.2,320 குறைவு
-
அமைச்சர் நிர்மல் குமாருக்கு ரூ.1 கேட்டு நோட்டீஸ் அனுப்பியது அதிமுக