சிகிச்சை பலனின்றி யானை உயிரிழப்பு
பொள்ளாச்சி: நவமலை மின்வாரிய குடியிருப்பு பகுதியின் பின்புறம் வனப்பகுதியில், உடல் நலக்குறைவால் மிகவும் மோசமான நிலையில் படுத்திருந்த யானை குறித்து வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
வனத்துறை பணியாளர்கள், கால்நடை மருத்துவ குழுவினர் சம்பவ இடத்துக்கு சென்று, பாதிக்கப்பட்ட யானைக்கு மருத்துவசிகிச்சை அளித்தனர். 10 மணி நேரத்துக்கு மேலாக சிகிச்சை அளித்தும் யானையை காப்பாற்ற இயலவில்லை, என பொள்ளாச்சி வனச்சரகர் அப்துல்லா தெரிவித்தார்.
வனத்துறையினர் கூறுகையில், ‘இறந்த 50 வயதான பெண் யானை உடற்கூராய்வு செய்யப்பட்டது. முதுமை, வயிற்றுப்புண், உட்புற உறுப்புகளில் ஏற்பட்ட தொற்று நோய் காரணங்களாக இறந்திருக்க கூடும் என கால்நடை மருத்துவர்கள் முதற்கட்டமாக கணித்துள்ளனர்.
தேவையான மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பப்படுகிறது,’ என்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி வழக்கு; தள்ளுபடி செய்தது ஐகோர்ட்
-
இலங்கை தமிழர் சிவராசாவுக்கு விதித்த மரண தண்டனை; ரத்து செய்தது சவுதி அரேபியா
-
‘உடம்பில் சக்தி இருக்கும் வரை உழைப்பேன்!’
-
சவுதியில் தொடரும் பதற்றம்; இந்தியர்களுக்கு உதவி எண் அறிவிப்பு
-
'பணி சிறக்கட்டும்' ; ஐகோர்ட் புதிய நீதிபதிகளுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து
-
தொடர்ந்த சரியும் தங்கம் விலை; 3 நாளில் மட்டும் ரூ.2,320 குறைவு
Advertisement
Advertisement