சரக்கு வாகனம் கவிழ்ந்து கல்லுாரி மாணவர் பலி

கிணத்துக்கடவு: கோவை கிணத்துக்கடவு, செட்டியக்காபாளையத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரி மாணவர்கள், நேற்று மாலை பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது அவ்வழியே, கோவை கவுண்டர் மில்ஸ் பகுதியை சேர்ந்த தர்மராஜ், 29, என்பவர் சரக்கு வானகம் ஓட்டி வந்தார்.

அதில், பீகார் மாநிலத்தை சேர்ந்த 3 பேர் இருந்தனர். அந்த வாகனத்தில், மாணவர்கள் 14 பேர் ‘லிப்ட்’ கேட்டு ஏறி, தாமரைக்குளம் நோக்கி சென்றனர்.

அப்போது, பட்டணம் பகுதியில் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதை கண்ட அருகில் இருந்தவர்கள் காயமடைந்த, 18 பேரையும் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இந்த விபத்தில், பி.டெக்., ஐ.டி., இரண்டாம் ஆண்டு படித்து வந்த சிவகங்கையை சேர்ந்த சரண், 19, உயிரிழந்தார். விபத்து குறித்து கிணத்துக்கடவு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement