பெற்றோர், ஆசிரியர் கூட்டம்

பாப்பிரெட்டிப்பட்டி:பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர், ஆசிரியர் கூட்டம் தலைமையாசிரியர் கலைவாணன் தலைமையில் நடந்தது. உதவி தலைமை ஆசிரியர் ரகு, ஆசிரியர் செயலர் ராஜாமணி, கணினி ஆசிரியர் பார்த்திபன் முன்னிலை வகித்தனர். பட்டதாரி ஆசிரியர் ராஜாமணி வரவேற்றார்.

இக்கூட்டத்தில், மாணவர்களின் கல்வி முன்னேற்றம், தேர்ச்சி விகிதத்தை மேம்படுத்துவது, மாணவர்களின் காலாண்டு தேர்வு முடிவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு அவருடைய முன்னேற்றம் குறித்து, பெற்றோர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டது. அனைத்து ஆசிரியர்களும், மாணவர்களின் கல்வி நிலை கற்றல் திறன் மற்றும் முன்னேற்றம் குறித்து, பெற்றோருடன் கலந்துரையாடினர். கல்வித்தரத்தை உயர்த்துவதில் ஆசிரியர்களும், பெற்றோர்களும் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். உடற்கல்வி ஆசிரியர் ஜெகஜீவன் ராம் நன்றி கூறினார்.

Advertisement