மின்வாரிய தொழிற்சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

பாப்பிரெட்டிப்பட்டி:தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், கடத்துாரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சி.ஐ.டி.யு., மாநில செயலாளர் ஜீவா பேசினார்.

ஆர்பாட்டத்தில் தமிழக அரசு மின்வாரியம், அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும். மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் மின் வழித்தடங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் பி.பி.பி., முறையை கைவிட வேண்டும். 5 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் அனைத்து பணிகளையும் மேற்கொள்ளும் எப்.டி.இ., முறையை கைவிட வேண்டும். மின்வாரியத்தை பொதுத்துறையாக பாதுகாக்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

Advertisement