தீவனம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து

மொரப்பூர்:திருப்பூரில் இருந்து தொட்டம்பட்டிக்கு கோழித்தீவனம் ஏற்றிய லாரி நேற்று வந்தது. ஆனந்த் என்பவர் லாரியை ஓட்டி வந்தார்.

மொரப்பூர் - மருதிப்பட்டி சாலையில், காலை, 8:00 மணிக்கு சென்றபோது சாலை வளைவில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி கவிழ்ந்தது. இதில், தொழிலாளர்கள் இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. விபத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மொரப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement