போலி நகை அடகு வைத்து தலைமறைவானவர் கைது

அரூர்:தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ராமியணஅள்ளியிலுள்ள ‍பொதுத்துறை வங்கியில் கடந்தாண்டு, ஏப்., 16ம் தேதி கவரிங் நகைகளை அடகு வைத்து, மோசடி நடந்தது.

இந்த வழக்கில், தலைமறைவாக இருந்த, கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த உத்திரப்பள்ளியை சேர்ந்த லோகேஷ், 28, என்பவரை கோபிநாதம்பட்டி போலீசார் தேடி வந்தனர். நேற்று முன்தினம் இன்ஸ்பெக்டர் செந்தில் தலைமையிலான போலீசார் தலைமறைவாக இருந்த, லோகேஷை கைது செய்தனர்.

Advertisement