ஸ்ரீராம் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் மாவட்ட தடகள போட்டியில் சிறப்பிடம்

அரூர்:மாவட்ட அளவிலான தடகள போட்டிகளில், கம்பைநல்லூர் ஸ்ரீராம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

14 வயதுக்கு உள்பட்ட மாணவியர் பிரிவில் ஹனிஷா வட்டி எறிதலில் முதலிடமும், தாமரைச்செல்வி, 2ம் இடமும், நேஷாஸ்ரீ, 200 மீட்டர் ஓட்டத்தில், 2ம் இடமும் பெற்றனர். மாணவர் பிரிவில் வசந்குமார், 100 மற்றும் 200 மீ., ஓட்டத்தில் முதலிடமும், குண்டு எறிதலில் மாணவர் தினேஷ், 2ம் இடமும், வட்டு எறிதலில் அபிலேஷ், 2ம் இடமும் பெற்றனர். ரோகித் விஷ்ணு நீளம் தாண்டுதலில், 2ம் இடமும், 400 மீ., தொடர் ஓட்டத்தில் தினேஷ், வசந்தகுமார், நரேந்தர், ரோஹித் விஷ்ணு ஆகியோர் மூன்றாம் இடமும் பெற்றனர்.17 வயதுக்கு உட்பட்ட மாணவர் பிரிவில் ஜனார்த்தனன் வட்டு எறிதலில் முதலிடம் பெற்றார். மாணவியர் பிரிவில் பிரணித்தா நீளம் தாண்டுதல் முதலிடமும், வர்ஷா வட்டு எறிதலில் மூன்றாம் இடம் பெற்றார். 19 வயதுக்கு உள்பட்ட பிரிவில் மாணவர் கன்ஷ், குண்டு எறிதலில் முதலிடமும், ஈட்டி எறிதலில், 3ம் இடமும் பெற்றனர்.
மாணவியர் பிரிவில் லோகாஸ்ரீ வட்டு எரிதலில் முதலிடமும், ரீனாஸ்ரீ, 2ம் இடமும், பிரேமலதா மும்முறை தாண்டுதலில், 3ம் இடமும் பெற்றனர். மாவட்ட அளவில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பெற்ற மாணவ, மாணவியர் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.
விளையாட்டு போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியர் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் புவனேஸ்வரி, திருப்பதி, தினேஷ், பாண்டி, ராஜதுரை, அப்பு ஆகியோரை, ஸ்ரீராம் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் வேடியப்பன், தாளாளர் சாந்தி வேடியப்பன், பள்ளி நிர்வாக இயக்குனர்கள் தமிழ்மணி, பவானி தமிழ்மணி, பள்ளி முதல்வர்கள் சாரதி மகாலிங்கம், ஜான் இருதயராஜ், ஆசிரியர்கள் பாராட்டினர்.

Advertisement