பைக்கில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி

அரவக்குறிச்சி:அரவக்குறிச்சி அருகே தடாகோவிலில், பல்சர் பைக்கில் சென்ற வாலிபர் நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே சித்திரை பிள்ளைவலசு அடுத்துள்ள வேட்டைக்காரனுார் சாமி நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் என்பவரது மகன் ரமேஷ், 29. இவர் கடந்த, 10ம் தேதி இரவு 11:00 மணியளவில், கரூரில் இருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில், பல்சர் பைக்கில் ெஹல்மெட் அணியாமல் சென்று கொண்டிருந்தார். அரவக்குறிச்சி தடாகோவில் அருகே வேகமாக வந்தபோது, நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இது குறித்து, அரவக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement