சாலையில் ஓடிய கழிவுநீர் வாகன ஓட்டிகள் அவதி

கரூர்:கரூர் சாலையில், கழிவுநீர் நேற்று காலை ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

கரூர் மாநகராட்சி அலுவலகம் அருகே பள்ளிகள், போலீஸ் ஸ்டேஷன், ஓட்டல், தங்கும் விடுதி, குடியிருப்புகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் உள்ளன.

இந்நிலையில், அப்பகுதியில் உள்ள, பாதாள சாக்கடை மூடியில் இருந்து, கழிவுநீர் நேற்று காலை வெளியேறி சாலையில் ஓடியது. அப்போது துர்நாற்றம் வீசியதால், அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது. எனவே கரூர் மாநகராட்சி அதிகாரிகள், பாதாள சாக்கடை கால்வாயில் மூடியில் இருந்து, மேல்புற மூடிகள் மூலம் கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க வேண்டியது அவசியம்.

Advertisement