வரி விவகாரத்தில் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம்; ஜெய்சங்கர்
புதுடில்லி: டில்லியில் பொருளாதாரம் தொடர்பாக ப்ளூம்பெர்க் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார்.
அதில், அவர் பேசியதாவது; அமெரிக்காவுடன் இந்தியாவுக்கு இருப்பது வெறும் உத்திசார் கூட்டணி மட்டுமே. ராணுவ கூட்டணி கிடையாது. அமெரிக்காவால் இந்தியாவுக்கு மட்டுமே சிக்கல் கிடையாது. புதிய வரிக் கொள்கையின் மூலம் அமெரிக்கா தங்களின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்து வருகிறார்கள். வரி விவகாரத்தில் நடத்தப்பட்டு வரும் பேச்சுவார்த்தை இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ஒவ்வொரு நாடும், அந்நாட்டுடனான உறவை மறுமதிப்பீடு செய்கின்றனர். புதிய சூழலுக்கு ஏற்றவாறு தங்களை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும்.
2020ல் எல்லையில் இந்தியா - சீன ராணுவ வீரர்களிடையே ஏறபட்ட மோதலால், இருநாடுகளுக்கு இடையிலான உறவில் பாதிப்பு ஏற்பட்டது. 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்பட்டு வரும் பேச்சுவார்த்தைக்கு பிறகு, தற்போது எல்லையில் அமைதி நிலவுகிறது. இரு நாடுகளின் உறவும் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது.
இந்த ஆண்டு ஐரோப்பிய நாடுகளுடனான உறவு முக்கியத்துவம் பெற்றுள்ளது. 25 ஆண்டுகளாகப் பேச்சுவார்த்தையில் இருந்த ஐரோப்பிய ஒன்றியத்துடனான தாராள வர்த்தக ஒப்பந்தம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இது நடைமுறைக்கு வரும். இது மிகப்பெரிய சந்தை வாய்ப்பை இந்தியாவுக்கு வழங்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி வழக்கு; தள்ளுபடி செய்தது ஐகோர்ட்
-
இலங்கை தமிழர் சிவராசாவுக்கு விதித்த மரண தண்டனை; ரத்து செய்தது சவுதி அரேபியா
-
‘உடம்பில் சக்தி இருக்கும் வரை உழைப்பேன்!’
-
சவுதியில் தொடரும் பதற்றம்; இந்தியர்களுக்கு உதவி எண் அறிவிப்பு
-
'பணி சிறக்கட்டும்' ; ஐகோர்ட் புதிய நீதிபதிகளுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து
-
தொடர்ந்த சரியும் தங்கம் விலை; 3 நாளில் மட்டும் ரூ.2,320 குறைவு