மருத்துவ காப்பீடு திட்ட குளறுபடி போக்குவரத்து ஓய்வூதியர் குமுறல்

ஈரோடு:அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு - சி.ஐ.டி.யு., சார்பில், ஈரோட்டில் சென்னிமலை சாலையில் உள்ள அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன், காத்திருப்பு போராட்டத்தை துவக்கினர். மாவட்ட தலைவர் ஜெகநாதன் தலைமை வகித்தார். மாவட்ட பொது செயலர் ஜான்கென்னடி, இளங்கோ, ஸ்ரீதரன், முருகையா உட்பட பலர் பேசினர்.

பிற அரசு துறை போல் போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கும், மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும். இதற்காக கடந்த, 2025 ஆக., மாதம், 62 நாட்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தையில் புதிய மருத்துவ காப்பீடு வரும்போது போக்குவரத்து ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் அமல்படுத்துவதாக உறுதியளித்தனர்.
கடந்த ஜூலை முதல், 2031 ஜூன் வரை, ஐந்தாண்டுக்கு மருத்துவ காப்பீடு உறுதிப்படுத்தி, அரசாணை வெளியிட்டனர். பயனாளியிடம் மாதம், 644 ரூபாய் பிடித்தும் செய்து, முன் காப்பீடு தொகையான, 7,728 ரூபாயை சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் செலுத்த தெரிவித்தனர். நிதித்துறை அவ்வாறு செலுத்தவில்லை. முன் காப்பீடு தொகையையும் ஓய்வூதியர்களே செலுத்த தயார் என நீதிமன்றத்தில் அதிகாரிகள் தெரிவித்து ஓய்வூதியர்களை வஞ்சித்துள்ளனர். முறையான மருத்துவ காப்பீடு திட்டத்தை நடைமுறைப்படுத்திட வேண்டும். அரசாணைக்கு புறம்பாக செயல்படும் பொறுப்பாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

Advertisement