5 நாள் பயணமாக இந்தியா வருகிறார் அமெரிக்க அமைச்சர் மார்கோ ரூபியோ

11

புதுடில்லி: அக்.,17ம் தேதி இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, மும்பை, ஜாம்நகர் போன்ற பகுதிகளுக்கு செல்கிறார். இதன்மூலம், அவர் 2வது முறையாக இந்தியாவுக்கு வருகை தருகிறார்.

இந்தப் பயணத்தின் போது, மூத்த அதிகாரிகளை சந்தித்து பேசுகிறார். இந்தியா - அமெரிக்கா இடையேயான ராஜதந்திர உறவு, உலக மற்றும் பிராந்தியத்தில் நிலவும் விவகாரங்கள் மற்றும் எரிசக்தி தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்த இருக்கிறார். தொழில் அதிபர்களையும் சந்தித்து பேசும் அவர், வர்த்தக முதலீடுகள், பொருளாதார ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் வாங்கும் இந்தியா மீது 100 சதவீதம் அமெரிக்கா வரி விதித்தது. இந்த சூழலில், மார்கோ ரூபியோ இந்தியா வருகிறார். இருநாடுகளுக்கு இடையே வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை முடங்கியுள்ள நிலையில், இவரது பயணம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement