அமெரிக்க அரசியல்வாதிகளின் சொதப்பல்: இந்திய போர்க்கப்பல் படங்களை வெளியிட்டு வாழ்த்திய காமெடி
வாஷிங்டன்: அமெரிக்க கடற்படையானது 1775ம் ஆண்டு நிறுவப்பட்டது. அந்நாடு சுதந்திரத்திற்கு முன்பு அமைக்கப்பட்ட இப்படை, தற்போது உலகில் சக்திவாய்ந்ததாக உள்ளது. இப்படை உருவாக்கப்பட்டதன் 251வது ஆண்டு தினம் நேற்று( அக்டோபர் 13)ம் தேதி கொண்டாடப்பட்டது.
அமெரிக்க கடற்படையை பாராட்டும் வகையில் அந்நாட்டு அரசியல்வாதிகள் பாராட்டு தெரிவித்து சமூக ஊடகங்களில் பதிவுகளை வெளியிட்டனர். குறிப்பாக அதிபர் டிரம்ப் சார்ந்துள்ள குடியரசு கட்சி தலைவர்கள் போர்க்கப்பல்கள் படங்களை வெளியிட்டு வாழ்த்தினர். ஆனால், அனைவரும் குறிப்பிட்டு ஒரு தவறை செய்தனர். யாரும் கவனிக்காத நிலையில், அமெரிக்க பத்திரிகையாளர் ஒருவர் அதை சுட்டிக்காட்டினார். அரசியல்வாதிகள் அனைவரும் வெளியிட்டது அமெரிக்க போர்க்கப்பல் அல்ல.
இந்திய போர்க்கப்பல் என சுட்டிக்காட்டினார். இணையத்தில் அதனை ஆராய்ந்த போது அவர்கள் வெளியிட்டது ஐஎன்எஸ் கோதாவரி, ஐஎன்எஸ் பிரம்மபுத்ரா மற்றும் ஐஎன்எஸ் பியாஸ் கப்பல்கள் அவை. 2008 ம் ஆண்டு அமெரிக்க இந்தியா கடற்படை பயிற்சியில் ஈடுபட்டன. அப்போது அமெரிக்க போட்டோ கிராபர் எடுத்த புகைப்படத்தை அவர்கள் வெளியிட்டனர்.





இங்க தான் தற்குறியா பேசிட்டு திரியுறாங்கன்னா.. அங்கேயுமா..?
azhagu அண்ணன் பெரிய அறிவாளியாக்கும்
இல்ல செந்தில் சார்.. தற்குறிக்கு ஒட்டு போட்டு நானும் தற்குறியாயிட்டேன்.. அடுத்த தேர்தல்ல அறிவாளியாக ட்ரை பண்றேன்..
சொதப்பல் மன்னன் ட்ரம்ப் என்ன சொல்கிறார் இந்த சொதப்பலுக்கு?
அமெரிக்காவில் h1 ஆளுங்க நிறைய ஆயிட்டாங்க. நம்ம ஊர்ல இப்பிடித்தான் சொதப்புனாங்க. இப்போ அங்கே போயி எல்லாம் இந்தியம்.
விசாகோமாரு போன்ற தத்திகளும் இங்கு இருக்காங்கமேலும்
-
சவுதியில் இருக்கும் இந்தியர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்; இந்திய தூதரகம்
-
ஒவ்வொரு குடிமகனும் பத்திரிகையாளராக மாறினால் சிக்கல்களை உருவாக்கும்; சுப்ரீம்கோர்ட் கருத்து
-
தோகைமலையில் கொட்டி தீர்த்த மழையால் தரைப்பாலத்தில் வெள்ளம்
-
அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு மரம் நடும் விழா
-
மின்வாரிய ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
-
நிழற்கூடம் இல்லாத வாங்கல் அக்ரஹாரம் பஸ் ஸ்டாப்