மின்வாரிய ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

கரூர்:கரூர்-, கோவை சாலையில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன், அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார்.

ஸ்மார்ட் மீட்டர் திட்டத்திற்கான டெண்டர் அறிவிப்பை உடனடியாக திரும்ப பெற வேண்டும். மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கட்டமைப்பு திட்ட முறைகளை தனியார்மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும். தொழிலாளர்களின் பணிப் பாதுகாப்பைப் பறிக்கும், 5 ஆண்டு கால ஒப்பந்த முறையை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் சுப்பிரமணி, பிரேமா, செல்வராஜ், கோபி உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement