ஒவ்வொரு குடிமகனும் பத்திரிகையாளராக மாறினால் சிக்கல்களை உருவாக்கும்; சுப்ரீம்கோர்ட் கருத்து
புதுடில்லி: ஒவ்வொரு குடிமகனும் பத்திரிகையாளராக மாறினால், அது அனைவருக்கும் சிக்கல்களை உருவாக்கும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
டில்லியில் அக்டோபர் 10, 11ல் நடந்த போராட்டங்களின் போது பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டதாக குற்றம்சாட்டி சுப்ரீம்கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
அப்போது போராட்டங்களைச் செய்தி சேகரிக்கும் சுயாதீன பத்திரிகையாளர்களை டில்லி போலீசார் அங்கீகரிக்கவில்லை; ஐடி கார்டு வைத்திருக்கும் எந்தவொரு பத்திரிகையாளரின் பணிக்கும் போலீசார் இடையூறு செய்யக்கூடாது; ஒரு தேசிய நெறிமுறை உருவாக்கப்பட வேண்டும் என மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் தெரிவித்தார். பிறகு நீதிபதிகள் கூறியதாவது:
* நாம் ஒரு விஷயத்தையும் மனதில் கொள்ள வேண்டும். கருத்துச் சுதந்திர உரிமையின் கீழ் அனைவரும் தங்களைப் பத்திரிகையாளர்கள் என்று கூறிக் கொள்ளும்போதுதான் சிக்கல் எழுகிறது.
* அங்கீகரிக்கப்பட்ட ஊடக நிறுவனங்களைச் சேர்ந்த உண்மையான செய்தியாளர்களை அடையாளம் கண்டு, பாதுகாப்பு வழங்குவது அரசுக்கு கடினமாகிவிடுகிறது.
* அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர்களை டிஜிட்டல் தளத்தில் பணிபுரிபவர்களிடமிருந்து வேறுபடுத்துவதில் சவால்கள் இருக்கிறது.
* சில போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராகக் குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் உள்ளன. ஒரு சுதந்திரமான விசாரணை அமைப்பு இதை விசாரிக்க வேண்டுமா என்பதை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்.
* வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பான நான்கு மனுக்கள் உள்ளன. இது குறித்து பதிலளிக்குமாறு அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளோம். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
இப்படிப்படித்தால் அர்த்தம் சரியாக இருக்கும்
யுடியூப் மற்றும் பேஸ்புக் வந்ததிலிருந்து பலரும் பத்திரிகையாளராக மாறிவிட்டனர். இந்த சமூக ஊடகங்களுக்கு என தனியான சட்டதிட்டங்களோ அல்லது வழிகாட்டுதல்களோ அல்லது கட்டுப்பாடுகளோ இல்லை. அதனால் அதிகம் வியூவர்களை கவரவேண்டும் என்பதற்காக எதைவேண்டுமானாலும் பதிவிடுகின்றனர்.
அணைத்து மீடியவையும் கோடி மீடியாவாக மாற்றினாலும் சிக்கல்தான்
இன்று பல பத்திரிகையாளர்கள், பத்திரிகை ethics , அதாவது பத்திரிகை தர்மம் எதுவுமே தெரியாமல் வாய்க்கு வந்ததையெல்லாம் எழுதி தானும் ஒரு பத்திரிகையாளன் என்று கூவித்திரிகிறான்.
நேர்மை யான மனிதன் மட்டுமே மனிதன். ஜால்றா, மனிதனாக இருக்க தகுதியற்றவர்கள்.
மக்களை விவரம் தெரியாத மாக்களா வைத்திருந்தால் தான் அரசர்கள் வருஷத்தில் மூன்றில் ஒரு நாட்கள் மட்டும் வேலை பார்க்கலாம் , மக்கள் வரிப்பணத்தில் குடும்பத்துடன் உல்லாசப்பயணம் போகலாம். அரசு மற்றும் இதர நிகழ்ச்சிகளில் நீதி , நேர்மை, responsibility , accountability பற்றி மணிக்கணக்கில் பேசலாம் .
பத்திரிக்கை எல்லாத்தையும் அடிமை ஆக்கிட்டா .... ஒரு உண்மையும் வெளியே வராது .... அதைத்தான் அரசியல்வாதிகள் செய்கிறார்கள் அதற்கு நீதி ....... துணை போகின்றது .....
இப்போதெல்லாம் டுபாக்கூர் பத்திரிகையாலர்கள் அதிகமாகிவிட்டனர். கட்டப்பஞ்சாயத்து, பேரம், சில சமயம் போலிசாரோடு கைகோர்த்து செய்யும் ஜாலங்கள் என நல்லா கல்லாகட்றாங்க.
அவனை கண்டுபிடித்து சுளுக்கு எடுக்கலாமே?
எந்த நிருபரானாலும் அவங்க சொந்த ரிஸ்க்லதான் போகணும். தைரியம்தான் துணை. இல்லேன்னா போகாதிங்க.
கோடி மீடியா ஆளுங்களைத்தான் அனுமதிக்கணும்.
தண்ட சோற்று அப்பாவி கும்பல் எங்கும் அனுமதி இல்லைமேலும்
-
கிரானைட் வீரமணி வழக்கில் 3 வங்கி கணக்குகள் முடக்கம்; ரூ.24 கோடி பறிமுதல்
-
சமரச மையம் சார்பில் விழிப்புணர்வு பேரணி
-
கரூரில் வரும் 23ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்
-
புகழிமலை கோவிலில் புரட்டாசி மாத சஷ்டி
-
கரூர் வட்டாரத்தில் தொடர் மழை
-
த.வெ.க., கூட்ட நெரிசல் வழக்கு: சி.பி.ஐ., விசாரணை தொடங்கி ஓராண்டு நிறைவு