தோகைமலையில் கொட்டி தீர்த்த மழையால் தரைப்பாலத்தில் வெள்ளம்

குளித்தலை:குளித்தலை அடுத்த தோகைமலை பகுதியில் நேற்று முன்தினம் மாலை கன மழை கொட்டி தீர்த்ததது.

தொடர்ந்து இரவு நேரத்திலும் மழை பெய்தது. தொடர் மழையால் தோகைமலை பகுதியில் உள்ள குளங்கள், விவசாய கிணறுகளில் தண்ணீர் தேங்கியது. காட்டு வாரி வழியாக வெளியேறிய மழை தண்ணீர், தோகைமலை திருச்சி நெடுஞ்சாலையில், வெள்ளைப்பட்டி கிராமம் அருகேயுள்ள, தரைப்பாலத்தில் தண்ணீர் அதிகளவு ஓடியது. இந்த மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்களுக்கு பயனளிக்கும் வகையில் மழை இருந்தது.

Advertisement