ஜெர்மனி குடியிருப்பில் தீ: இந்தியர்கள் 3 பேர் பலி

2

பெர்லின்:ஜெர்மனியின் போசும் நகரில் குடியிருப்பில் நேற்று காலை தீப்பற்றியது. இதற்கான காரணம் தெரியவில்லை.

தரைதளத்தில் பற்றிய தீ, மளமளவென மாடி பகுதிகளுக்கும் பரவியது. இதனால் தீயணைப்பு துறையினர் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது. ஒரு வழியாக போராடி தீயை அணைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இச்சம்பவத்தில் 25,27 வயதுடைய பெண்கள் இரண்டு பேர் மற்றும் 26 வயதான நபர் ஒருவர் மூன்று பேர் உயிரிழந்தனர். இவர்கள் இந்தியர்கள் என தெரியவந்தது.
மேலும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஐந்து பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். அவர்கள் எந்த நாட்டவர் என்ற தகவல் இல்லை.
இந்த சம்பவம் கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ரொமேனியா நாட்டை சேர்ந்த 41 வயதான நபரை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement