உள் விளையாட்டு அரங்கம்: ரூ.70 லட்சத்தில் பராமரிப்பு
கூடலுார்:
‘கூடலுார் மார்த்தோமா நகர் பகுதியில், 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கில் நடக்கும் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்,’ என, வலியுறுத்தப்பட்டது.
கூடலுார் மார்தோமா நகர், அரசு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகே, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையும், மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட மூலம், 24.5 லட்சம் ரூபாய் நிதியில் முடிக்கப்பட்ட பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கம், 2005 ஏப்., திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இங்கு, உள் இறகு பந்து மைதானம், உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வீரர்கள் பயிற்சி பெற தினமும் காலை, மாலை அனுமதி வழங்கப்படுகிறது.
இதிலுள்ள, இறகு பந்து மைதானத்தின் தரைத்தளம் உள்ளிட்ட பகுதிகள் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்பட்டது. இதனால், வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள சிரமப்பட்டு வந்தனர். இது தொடர்பாக, மே மாதம் ‘தினமலர்’ நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
இந்நிலையில், விளையாட்டுத்துறை சார்பில், 70 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, சீரமைப்பு பணிகள் துவக்கப்பட்டன. இப்பணிக்காக, அரங்கத்தின் மேற்கூரைகள் அகற்றப்பட்டுள்ளன.
மாவட்ட விளையாட்டு அலுவலர் இந்திரா கூறுகையில்,‘‘உள் விளையாட்டு அரங்கின் மேற்கூரை, தரை பகுதி சீரமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்வதற்காக, 70 லட்சம் ரூபாய் நிதியில் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. பணிகள் இரண்டு மாதத்தில் நிறைவு பெரும். தொடர்ந்து, உள் விளையாட்டு அரங்கு திறந்து செயல்படும்,’’என்றார்.
மேலும்
-
சவுதியில் இருக்கும் இந்தியர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்; இந்திய தூதரகம்
-
ஒவ்வொரு குடிமகனும் பத்திரிகையாளராக மாறினால் சிக்கல்களை உருவாக்கும்; சுப்ரீம்கோர்ட் கருத்து
-
தோகைமலையில் கொட்டி தீர்த்த மழையால் தரைப்பாலத்தில் வெள்ளம்
-
அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு மரம் நடும் விழா
-
மின்வாரிய ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
-
நிழற்கூடம் இல்லாத வாங்கல் அக்ரஹாரம் பஸ் ஸ்டாப்