நீலகிரி அரசு பள்ளியில் பயின்ற விஞ்ஞானி: உலகின் தலைசிறந்த பட்டியலில் இடம் பிடித்து சாதனை
குன்னுார்: குன்னுார் அருகே காட்டேரி கிராமத்தை சேர்ந்தவர், உலகின் தலைசிறந்த, 2 சதவீத விஞ்ஞானிகள் பட்டியலில் இடம் பிடித்து நாட்டுக்கு பெருமை தேடி தந்துள்ளார்.
நீலகிரி மாவட்டம், குன்னுார் அருகே காட்டேரி கிராமத்தை சேர்ந்தவர் ரவிசங்கரன்,54. தற்போது சென்னை பல்கலை கழக கல்வி பிரிவு தலைவர் மற்றும் ‘நானோ’ அறிவியல் மற்றும் நானோ தொழில்நுட்ப தேசிய மைய பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், அமெரிக்கா ஸ்டான்போர்டு பல்கலை கழகம் மற்றும் எல்சேவியர் நிறுவனத்தின், 2026 ஆண்டிற்கான 'உலகின் தலைசிறந்த, 2 சதவீத விஞ்ஞானிகள்' பட்டியலில், இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவர், மத்திய அரசின் பாபா அணு ஆராய்ச்சி மையம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை முக்கிய ஆராய்ச்சி திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றியதுடன், இரு புத்தாக்க நிறுவனங்களின் இயக்குனராகவும் உள்ளார். இவர் ஜப்பானில் ஆய்வாளராக இருந்தபோது, ஆர்.டி.எக்ஸ்., மற்றும் டி.என்.டி., போன்ற ஆபத்தான பொருட்களை கண்டறியும் ‘சென்சார்’களை உருவாக்கி உள்ளார்.
ஏற்கனவே, தென் கொரியா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு பல்கலை கழகங்களில் உயர் ஆய்வு பணிகளை மேற்கொண்டுள்ள இவர், சர்வதேச அளவில், 75-க்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.
இவர், கேத்தி என்.எஸ்., ஐயா அரசு உதவி பெறும் பள்ளி, அதிகரட்டி அரசு மேல்நிலை பள்ளியில் பயின்று, கோவை ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியில் எம்.எஸ்.சி., பட்டம் பெற்றார். கிராமத்தில் அரசு பள்ளியில் பயின்று, சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளதற்கு, நீலகிரி மாவட்ட மக்கள், சென்னை பல்கலைக்கழகத்தின் கல்வியாளர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
@block_B@விஞ்ஞானி ரவிசங்கரன் கூறுகையில், ‘‘அணுக்கள் அளவிலான நானோ தொழில்நுட்பத்தின் தனித்துவம் அன்றாட வாழ்வியலில் உள்ளது. எனவே, நானோ தொழில் நுட்பங்களுடன் கூடிய புதிய ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் துவங்க இளைய தலைமுறையினர் முன்வந்தால் நல்ல எதிர்காலம் உள்ளது,’’ என்றார்.block_B
மேலும்
-
45 உதவியாளர்களுக்கு பதவி உயர்வு
-
உளுந்துார்பேட்டை ஒன்றியம் மற்றும் நகராட்சியை மீண்டும் கைப்பற்றுவோம்: வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., சூளுரை
-
வாகனங்களில் காய்கறி விற்பனை மார்க்கெட் வியாபாரிகள் எதிர்ப்பு
-
விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
-
மஞ்சுவிரட்டு முன்விரோதம் வாளால் வெட்டியவர்கள் கைது
-
மேகமலையை புலிகள் காப்பக பகுதியில் இருந்து நீக்க வேண்டும்: விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்