ஈரான் அதிபராக யார் விரும்புகிறீர்கள்? தேர்தல் பிரசாரத்தில் அதிபர் டிரம்ப் கேள்வி

1

வாஷிங்டன்: ஈரானின் அதிபராக யார் விரும்புகிறீர்கள் என தேர்தல் பிரசாரத்தின் போது அமெரிக்க அதிபர் டிரம்ப் கேள்வி எழுப்பினார்.

அமெரிக்காவின் அரிசோனாவில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் டிரம்ப் பேசியதாவது: ஈரானின் அதிபராக யார் இருக்க விரும்புகிறீர்கள்? தயவுசெய்து கையை உயர்த்துங்கள். நான் விரும்பவில்லை. நான் ஒருவேளை கொஞ்சம் எல்லை மீறிவிட்டேன். மன்னிக்கவும், ஏனென்றால் நாம் யாரை எதிர்கொள்கிறோம் என்றே எனக்குத் தெரியவில்லை.

ஈரானுக்கு நாங்கள் என்ன செய்கிறோம் என்று பொறுத்திருந்து பாருங்கள். நாங்கள் ஒரு பெரிய அடி கொடுக்கப் போகிறோம். பாருங்கள்; முக்கிய விஷயம் என்னவென்றால், அவர்களிடம் அணு ஆயுதம் இருக்காது. இவ்வாறு அதிபர் டிரம்ப் பேசினார்.

இதற்கிடையில் ஈரான் பார்லிமென்ட் சபாநாயகர் முகமது பாகர் காலிபாப், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான மோதலுக்கும் இடையில், நாட்டின் ஆயுத பலம், தாக்குதல் சக்தி மற்றும் வான் பாதுகாப்பு உள்ளிட்ட ராணுவத் திறன்கள் கணிசமாக அதிகரித்துள்ளது என அதிபர் டிரம்புக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisement