வாகனங்களில் அரசு ஸ்டிக்கர்: அறிக்கை கேட்கிறது ஐகோர்ட்
சென்னை: தேசிய மற்றும் அரசு சின்னங்களை தவறாகப் பயன்படுத்துவோர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து, போக்குவரத்து துறை கமிஷனர் அறிக்கை தாக்கல் செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பஸ் சேவை தொடர்பான வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதி என்.செந்தில்குமார் முன் விசாரணைக்கு வந்தது.
நீதிபதி பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கில், போக்குவரத்து துறை கமிஷனரை எதிர்மனுதாரராக இணைக்கிறேன். கடந்த ஆறு மாதங்களில், அரசு மற்றும் தனியார் வாகனங்களில் பத்திரிகையாளர், மருத்துவர், வழக்கறிஞர், காவல் துறை போன்ற அங்கீகரிக்கப்படாத 'ஸ்டிக்கர்'கள், வாசகங்கள் இடம்பெறும் நடைமுறைக்கு எதிராக, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து, அவர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
முன்னாள் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், ஓய்வுபெற்ற அதிகாரிகள், முன்னாள் அலுவலர்கள் தங்களது வாகனங்களிலோ, கடித தாள்களிலோ, கட்டடங்களிலோ, அரசு சின்னங்களை பயன்படுத்துவது அங்கீகரிக்கப்படவில்லை. ஆனால், துரதிருஷ்டவசமாக பலர், அரசு சின்னங்களை தவறாகப் பயன்படுத்தி, வாகனத்தின் வெளியே ஒட்டி வருகின்றனர்.
தவறாகப் பயன்படுத்தப்படும் தேசிய சின்னங்களை ஒரு மாதத்திற்குள் அகற்ற வேண்டும்; விதிமீறலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என, அரசு, டி.ஜி.பி.,க்கு நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அது அமல்படுத்தப்பட்டதா என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அங்கீகாரம் இல்லாத சின்னங்களைத்தவிர நீதித்துறை, வருவாய்த்துறை போன்ற வாசகங்களும் ஒட்டப்பட்டுள்ளது. இளைஞர்கள் அதிகம் விரும்பும் சில ரேசர் பைக்குகளில் பின்புறம் பதிவெண் பலகையே இருப்பதில்லை. விபத்துகளை ஏற்படுத்தி விட்டு செல்லும் வாகனங்களை அடையாளம் காணமுடிவதில்லை. ஆனால் இந்த கொளுத்தும் வெயிலில் தலைக்கவசம் அணியமுடியாமல் சிரமப்படும் இருசக்கர வாகன ஓட்டிகளை பிடித்து அபராதம் விதித்து கணக்கு காட்டுவதைமட்டும் மிகவும் அக்கறையாக செய்கின்றனர் போக்குவரத்து காவலர்கள்
போக்குவரத்து துறை அதிகாரிகள் போக்குவரத்து முறைகள் பற்றி தெரியாமலேயே அதிகாரம் செய்கிறார்கள் இதற்கு காவல்துறையும் உடன் செயல்படுகிறது இவர்கள் நீதிமன்ற முடிவுகளை செயல்படுத்துவது என்பது ஆகாயத்தை மடக்கி ஒரு சிறு பெட்டிக்குள் வைப்பது போல தான்