மலைப்பாதையில் கவிழ்ந்த லாரி

சத்தியமங்கலம்:கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகரில் இருந்து மரத்துண்டுகள் ஏற்றிய ஒரு லாரி கோவைக்கு புறப்பட்டது. திம்பம் மலைப்பாதையில் நேற்று காலை, 7:00 மணிக்கு ஏழாவது கொண்டை ஊசி வளைவில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.

லாரியில் இருந்த மரத்துண்டுகள் சாலையில் விழுந்ததால் வாகனங்கள் செல்லமுடியாமல் போக்குவரத்து பாதித்தது. மீட்பு வாகனம் மூலம் லாரியை அப்புறப்படுத்திய பிறகு, 11:00 மணிக்கு வாகனங்கள் ஊர்ந்தபடி செல்ல தொடங்கின. மலைப்பாதையில், 4 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

Advertisement