ஊராட்சி நிர்வாகம் குறித்த 3 மாத பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

கரூர்:ஊராட்சி வளர்ச்சி திட்டங்கள் குறித்த, மூன்று மாத கால சான்றிதழ் பயிற்சிக்கு வரும், 21க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, கலெக்டர் முத்துக்குமரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரில், தமிழக அரசின் மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனம் சார்பில், ஊரக உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் ஊராட்சி வளர்ச்சி திட்டங்கள் குறித்த, மூன்று மாத கால சான்றிதழ் பயிற்சி நடக்கிறது. பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பும் பங்கேற்பாளர்கள், பிஸஸ் 2 முடித்து 18 வயது நிரம்பியவர்களாக இருக்க வேண்டும். பயிற்சியில் சேர கட்டணமாக, 1,000 ரூபாய்- இணையதளம் வாயிலாக செலுத்த வேண்டும். பயிற்சி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். வரும், 21க்குள் dpokarur@gmail.com என்ற இ.மெயில் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு, கரூர் மாவட்ட ஊராட்சிகளுக்கான மாவட்ட வள மைய ஆலோசகர் திவ்யபாரதி என்பவரை, 96297 00221 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement