300 மாத்திரையுடன் 3 வாலிபர்கள் கைது

ஈரோடு:ஈரோடு குமலன் குட்டை முருகேசன் காலனியை சேர்ந்தவர் தருண், 21; சூரம்பட்டி குமரன் வீதியை சேர்ந்தவர் ரிஷாந்த், 21; வளையக்கார வீதி வி.வி.சி.ஆர்.நகரை சேர்ந்தவர் துரைசாமி, 20; மூவரும் நேற்று சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று இருந்தனர்.

வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரித்ததில், போதை ஏற்ற பயன்படுத்தி கொள்ள, விற்க, 300 வலி நிவாரணி மாத்திரை வைத்திருந்து தெரியவந்தது. மாத்திரைகளை கைப்பற்றிய போலீசார் மூவரையும் கைது செய்தனர். இதில் தருண், துரைசாமி மீது போலீஸ் ஸ்டேஷன்களில், ஏற்கனவே வழக்கு உள்ளதாக தெரிவித்தனர்.

Advertisement