வளைகுடா நாடுகளில் வசிக்கும் 1 கோடி இந்தியர்களின் பாதுகாப்பு முக்கியம்; ஐ.நா.,வில் இந்தியா வலியுறுத்தல்
நியூயார்க்: நியூயார்க்கில் நடந்த ஐநா பாதுகாப்புப் பேரவைக் கூட்டத்தில் இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி பார்வதனேனி ஹரீஷ், இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து பேசினார்.
அவர் பேசியதாவது; மேற்காசியாவின் பாதுகாப்பும், நிலைத்தன்மையின் மீதும் இந்தியா மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. வளைகுடா நாடுகளில் மட்டும் இந்தியர்கள் ஒரு கோடி பேர் வசிக்கின்றனர். அவர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியம்.
சவுதி அரேபியாவில் கடந்த சில நாட்களாக பொதுமக்கள் வசிக்கும் இடங்களின் மீது தொடர்ச்சியான தாக்குதல் நடத்தப்படுகிறது. இதில், இந்தியரும் கொல்லப்பட்டுள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. அதேபோல, இந்திய சரக்கு கப்பல்கள் மீதும் நடத்தப்படும் தாக்குதல் கவலையளிக்கிறது. கப்பல்களில் பணிபுரியும் இந்திய மாலுமிகளின் பாதுகாப்பு மிக முக்கியமானதாகும்.
சரக்கு கப்பல்கள், பொதுமக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும். பேச்சுவார்த்தை மற்றும் தூதரக நடவடிக்கைகள் மூலம் பிராந்தியத்தில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்வதேச நீர்வழிகள் வழியாக கப்பல் போக்குவரத்திற்கான சுதந்திரம் மற்றும் கடல்சார் வர்த்தகத்தின் பாதுகாப்பை நிலைநிறுத்த வேண்டும். இவ்வாறு கூறினார்.
மேலும்
-
இந்திய கடற்படை ரகசியத்தை பாகிஸ்தானுக்கு கசிய விட்ட வழக்கு; மேலும் 2 பேர் கைது
-
யார் திறந்தால் என்ன? திட்டமிட்டு உருவாக்குவதே பெருமை; ஸ்டாலின்
-
சவுதியில் இருக்கும் இந்தியர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்; இந்திய தூதரகம்
-
ஒவ்வொரு குடிமகனும் பத்திரிகையாளராக மாறினால் சிக்கல்களை உருவாக்கும்; சுப்ரீம்கோர்ட் கருத்து
-
தோகைமலையில் கொட்டி தீர்த்த மழையால் தரைப்பாலத்தில் வெள்ளம்
-
அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு மரம் நடும் விழா