இந்திய கடற்படை ரகசியத்தை பாகிஸ்தானுக்கு கசிய விட்ட வழக்கு; மேலும் 2 பேர் கைது
விசாகப்பட்டினம்: இந்திய கடற்படை குறித்த ரகசியங்களை பாகிஸ்தான் உளவு அமைப்புகளுக்கு பகிர்ந்த வழக்கில் அடுத்தடுத்த கைது சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.
ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை தளத்தில் பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்த வழக்கில் அங்கு பணியாற்றும் பொங்கு ரவி, கடாரி ஸ்ரீனிவாஸ் என்பவர்களை ஆந்திர போலீசாரின் கவுண்டர் இன்டலிஜென்ஸ் பிரிவு கைது செய்துள்ளது.
2023ல் 'ஏஞ்சல் பயல்' என்ற போலி சமூக வலைதள கணக்கைப் பயன்படுத்திய பெண்ணுடன் பேஸ்புக் மூலம் இவர்களுக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் நீர்மூழ்கிக் கப்பல்கள், போர்க்கப்பல்கள் பற்றிய ரகசியத் தகவல்களைப் பணத்திற்காகப் பகிர்ந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அண்மையில் இதே வழக்கில் கடற்படை அதிகாரி பிரதீப் முகர்ஜி, கோவையில் வைத்து ஆந்திர போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதுவரை இந்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய 18 சந்தேக நபர்களில் 13 பேர் கடற்படைப் பணியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதீப் முகர்ஜி ?? தாதா , தீதீக்கள் பணத்துக்காக எதையும் செய்வாங்க .....
ஜெய் ஸ்ரீராம்மேலும்
-
இளைஞர்களை அராஜகத்தில் தள்ளி ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் முயற்சி; ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு
-
பெயரை கூட ஏற்க முதல்வர் விஜய்க்கு மனமில்லையா? கேட்கிறார் உதயநிதி
-
போதைப்பொருள் விற்பனையை தடுத்த சமூக ஆர்வலர் சுட்டுக்கொலை; பஞ்சாப் அரசிடம் அறிக்கை கேட்கிறார் அமித் ஷா
-
சவுதி அரேபியாவில் நீடிக்கும் பதற்றம்; அக்.,20 வரை ஏர் இந்தியா விமான சேவை ரத்து
-
சிறுமிகள் பாலியல் வழக்கு; புழல் சிறையில் வைத்து வீரமணியிடம் போலீசார் விசாரணை
-
அதிமுகவை பலவீனப்படுத்துவதிலேயே தவெக கவனம்; இபிஎஸ் குற்றச்சாட்டு