டெங்கு கொசு ஒழிப்பு பணி மும்முரம்
அரவக்குறிச்சி:பள்ளப்பட்டி நகராட்சிக்குட்பட்ட, 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில், விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, உழவர் சந்தை பகுதியின் நுழைவாயிலில், அங்கிருந்த மக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சல், ஏடிஸ் வகை கொசுக்கள் மூலம் பரவுகிறது. இவ்வகை கொசுக்கள் சுத்தமான, தேங்கிய நீரில் இனப்பெருக்கம் செய்வதால், வீடுகளில் தண்ணீர் சேமித்து வைக்கும் பாத்திரங்கள், தொட்டி மற்றும் தேவையற்ற பொருட்களில் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
நகராட்சி டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு வீடாக சென்று, தண்ணீர் சேமித்து வைக்கும் இடங்களில், கொசு புழுக்கள் உள்ளனவா என ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், மக்கள் வசிக்கும் பகுதிகள், பொது இடங்களில் தண்ணீர் தேங்குவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் நகராட்சியின் அனைத்து பகுதியிலும், வாகனங்கள் மூலம் வீதி வீதியாக சென்று கொசு மருந்து தெளிக்கும் பணிகளில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனை அல்லது சுகாதார நிலையத்தை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என, சுகாதார துறையினர் அறிவுறுத்துகின்றனர்.
மேலும்
-
வளைகுடா நாடுகளில் வசிக்கும் 1 கோடி இந்தியர்களின் பாதுகாப்பு முக்கியம்; ஐ.நா.,வில் இந்தியா வலியுறுத்தல்
-
யார் திறந்தால் என்ன? திட்டமிட்டு உருவாக்குவதே பெருமை; ஸ்டாலின்
-
சவுதியில் இருக்கும் இந்தியர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்; இந்திய தூதரகம்
-
ஒவ்வொரு குடிமகனும் பத்திரிகையாளராக மாறினால் சிக்கல்களை உருவாக்கும்; சுப்ரீம்கோர்ட் கருத்து
-
தோகைமலையில் கொட்டி தீர்த்த மழையால் தரைப்பாலத்தில் வெள்ளம்
-
அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு மரம் நடும் விழா