களை செடிகளால் தூர்ந்த குளம் கோவில் நிர்வாகம் பாராமுகம்
காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம், பஞ்சுபேட்டையில் உள்ள ஓணகாந்தேஸ்வரர் கோவில் குளம் உள்ளது. இந்த குளத்தை கோவில் நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், களை செடிகள் வளர்ந்து தூர்ந்துள்ளது.
பெரிய காஞ்சிபுரத்தில் உள்ள ஓணகாந்தேஸ்வரர் கோவில், தேவார பாடல் பெற்ற தொண்டை நாட்டு திருத்தலங்களில் மூன்றாவது தலமாக விளங்கி வருகிறது. ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில் அருகே, கோவிலுக்கு சொந்தமான குளம் உள்ளது.
இக்குளத்தை கோவில் நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், களை செடிகள் வளர்ந்து தூர்ந்துள்ளது. இதனால், மழை பெய்தால் தண்ணீர் சேகரிப்பதில் சிக்கல் ஏற்படும்.
எனவே, ஓணகாந்தேஸ்வரர் கோவில் குளத்தில் வளர்ந்துள்ள களை செடிகளை அகற்ற, ஹிந்து சமய அறநிலைய துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் ; அமைச்சர் அருண்ராஜ்
-
சவூதி அரேபியாவில் வசிக்கும் இந்தியர்களே கவனம்; புதிய அறிவுறுத்தல்களை வெளியிட்டது தூதரகம்
-
உண்டியல் பணத்தை வாங்கிப்போடுவது மட்டுமே அறநிலையத்துறையின் வேலையாக உள்ளது; அண்ணாமலை
-
திருப்பூர் ரயில் நிலையம்: ஒரே நாளில் 27 ஆயிரம் பேர்
-
பழச்சந்தையில் திடீர் மின் தடை ரூ.2 கோடி வியாபாரம் பாதிப்பு
-
மின் தடையை கண்டித்து புதுவண்ணையில் மறியல்
Advertisement
Advertisement