உண்டியல் பணத்தை வாங்கிப்போடுவது மட்டுமே அறநிலையத்துறையின் வேலையாக உள்ளது; அண்ணாமலை
பழனி: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சண்முகா நதியை தூய்மை செய்யும் பணியை வீ தி லீடர்ஸ் அமைப்பு மேற்கொண்டது. இதன் தலைவர் அண்ணாமலை உள்பட பலர் கலந்து கொண்டனர். சுமார் 600 டன் குப்பைகளை அகற்றினர்.
தூய்மைப்பணி நிறைவு விழாவில் அண்ணாமலை பேசியதாவது; அடுத்து தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடந்தால், வீ தி லீடர்ஸ் அமைப்பினர் போட்டியிட போகிறார்கள். காரணம், இதை எல்லாம் சரி செய்வது நமது கடமை. நம்முடைய வேலை. இங்கிருந்து ஆரம்பித்தால் தான் மட்டுமே மக்களுக்கு பயன்படும்.
கோட்டையில் இருப்பவர்கள், டில்லி செங்கோட்டையில் இருப்பவர்களை கேள்வி கேட்கலாம். அதற்கு முன்பு உள்ளாட்சியில் நாம் கேள்வி கேட்க வேண்டும். அதனால், நம்முடைய தன்னார்வல நண்பர்கள் எவ்வளவு ஆர்வமாக, களத்தில் இறங்கி இந்த வேலையை எல்லாம் செய்து முடிக்கிறோர்களோ, அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.
அந்தந்தப் பகுதியில் இருக்கும் நல்லவர்களை, வல்லவர்களை, மக்களுக்கு சேவை செய்யக்கூடியவர்களை சந்தித்து, உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுமாறு அழைக்க வேண்டும். வரக்கூடிய நிதி எல்லாம் முறையாக பயன்படுத்த வேண்டும். ஊழலற்ற உள்ளாட்சி நிர்வாகத்தை நாம் கொடுக்க வேண்டும்.
தமிழகத்தில் எங்கு பார்த்தாலும், ஆறுகள் எல்லாம் சாக்கடைகளாக மாறிக் கொண்டிருக்கின்றன. கோவிலில் இருந்து உற்பத்தியாகும் கழிவுகள் கூட, இந்த சண்முக நதியில் தான் கலக்கிறது. இதை நாம் எங்கு போய் சொல்வது. வேலியே பயிரை மேய்ந்தால், வேலி எதற்காக நாம் போட வேண்டும்.
இங்குள்ள கடவுளை பாதுகாப்பதற்காக, ஹிந்து அறநிலையத்துறை இருக்கிறது. ஆனால், அறநிலையத்துறையின் வேலை, மக்களிடம் இருந்து உண்டியல் பணத்தை வாங்குவது, அதனை அரசிடம் கொடுப்பது என்று தான் இருக்கிறது. கோவிலை நிர்வாகம் செய்யவோ, பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்யவோ மனம் வந்ததில்லை. அதற்கு சாட்சி தான் இந்த சண்முக நதி. கோவில் கழிவுகள் நதியில் கலப்பதை தடுக்க ஹிந்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் ; அமைச்சர் அருண்ராஜ்
-
சவூதி அரேபியாவில் வசிக்கும் இந்தியர்களே கவனம்; புதிய அறிவுறுத்தல்களை வெளியிட்டது தூதரகம்
-
திருப்பூர் ரயில் நிலையம்: ஒரே நாளில் 27 ஆயிரம் பேர்
-
பழச்சந்தையில் திடீர் மின் தடை ரூ.2 கோடி வியாபாரம் பாதிப்பு
-
மின் தடையை கண்டித்து புதுவண்ணையில் மறியல்
-
எஸ்.ஐ.ஆர்., சர்ச்சையை விசாரிக்க நீதிபதிகள் குழு அமைக்க வேண்டும் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்