மின் தடையை கண்டித்து புதுவண்ணையில் மறியல்

புது வண்ணாரப்பேட்டை: புதுவண்ணாரப்பேட்டையில் மின் தடையை கண்டித்து, பொதுமக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

புதுவண்ணாரப்பேட்டையில், பொன்னுசாமி தெரு, இருசப்பன் மேஸ்திரி தெரு, செரியன் நகர் உள்ளிட்ட பகுதிகளில், நேற்று முன்தினம் மாலை கனமழை காரணமாக, மின்சாரம் தடையானது.

நேற்று மாலை வரை, மின் சேவை சீராகாததால், ஆத்திரமடைந்த நுாற்றுக்கும் மேற்பட்டோர், புது வண்ணாரப்பேட்டை, வள்ளலார் நெடுஞ்சாலையில், சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து கலைந்து போக செய்தனர்.

Advertisement