விதிமீறும் குவாரி அமைச்சரிடம் மனு
கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டி பகுதிக்கு சென்ற அமைச்சர் விஸ்வநாதனிடம் சொக்கம்பட்டி, வேலாயுதம்பட்டி, வலைச்சேரிபட்டி உட்பட 5 கிராம மக்கள் மனு அளித்தனர். அதில், சொக்கம்பட்டி – வலைச்சேரிபட்டிக்கு இடையில் உள்ள அகிலா குட்டு இடத்தில் உள்ள கல்குவாரியில் வெடி வைப்பதால் விவசாய நிலங்கள், நீர் நிலைகள், வீடுகள், வனவிலங்குகள், இடைநிலை அய்யனார் கோயில் பாதிக்கப்படுகின்றன. வெடி வைக்கும் போது 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கிறது. கனிம வள விதிகளை மீறி செயல்படும் குவாரியை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் ; அமைச்சர் அருண்ராஜ்
-
சவூதி அரேபியாவில் வசிக்கும் இந்தியர்களே கவனம்; புதிய அறிவுறுத்தல்களை வெளியிட்டது தூதரகம்
-
உண்டியல் பணத்தை வாங்கிப்போடுவது மட்டுமே அறநிலையத்துறையின் வேலையாக உள்ளது; அண்ணாமலை
-
திருப்பூர் ரயில் நிலையம்: ஒரே நாளில் 27 ஆயிரம் பேர்
-
பழச்சந்தையில் திடீர் மின் தடை ரூ.2 கோடி வியாபாரம் பாதிப்பு
-
மின் தடையை கண்டித்து புதுவண்ணையில் மறியல்
Advertisement
Advertisement