உளுந்துார்பேட்டை ஒன்றியம் மற்றும் நகராட்சியை மீண்டும் கைப்பற்றுவோம்: வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., சூளுரை
உளுந்துார்பேட்டை: ‘‘உளுந்துார்பேட்டை ஒன்றியத்தையும். நகராட்சியையும் மீண்டும் கைப்பற்றுவோம் என தி.மு.க., எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன் பேசினார்.
உளுந்துார்பேட்டை ஒன்றியத்தில் சேர்மன், துணைச் சேர்மன், கவுன்சிலர்களின் பதவி காலத்தின் 5ம் ஆண்டு நிறைவு விழா நடந்தது. விழாவிற்கு எம்.எல்.ஏ.. வசந்தம் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். உளுந்துார்பேட்டை எம்.எல்.ஏ.. வசந்தவேல் முன்னிலை வகித்தார். பி.டி.ஓ.,க்கள் சந்திரசேகரன், சரவணன் வரவேற்றனர்.
விழாவில் ஒன்றிய சேர்மன் ராஜவேல். துணை சேர்மன் அலெக்சாண்டர், நகர மன்ற தலைவர் திருநாவுக்கரசு, துணைச் சேர்மன் வைத்தியநாதன், ம.தி.மு.க., மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அருண்ராஜ், ஒன்றிய கவுன்சிலர்கள், நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. பேசுகையில், ‘தி.மு.க.. வில் உழைப்பவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும். நீங்கள் செய்த வேலையை யாராலும் செய்ய முடியாது. மீண்டும் உளுந்துார்பேட்டை தி.முக.,வின் கோட்டையாக மாறும். இது பணி நிறைவல்ல. பணி தொடகாக விழா.
மீண்டும் வேலை செய்து பதவியை பெறவேண்டும். ஒற்றுமையாக இருக்க வேண்டும். சில விஷயங்களை போராடி தான் பெற வேண்டும். அந்த நேரத்தில் நீங்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். ராஜவேலு, வைத்தியநாதன் மீண்டும் பதவிக்கு வர நான் எந்த எல்லைக்கும் போவேன். உளுந்துார்பேட்டை ஒன்றியத்தையும். நகராட்சியையும் மீண்டும் கைப்பற்றுவோம்’ என்றார்.
மேலும்
-
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் ; அமைச்சர் அருண்ராஜ்
-
சவூதி அரேபியாவில் வசிக்கும் இந்தியர்களே கவனம்; புதிய அறிவுறுத்தல்களை வெளியிட்டது தூதரகம்
-
உண்டியல் பணத்தை வாங்கிப்போடுவது மட்டுமே அறநிலையத்துறையின் வேலையாக உள்ளது; அண்ணாமலை
-
திருப்பூர் ரயில் நிலையம்: ஒரே நாளில் 27 ஆயிரம் பேர்
-
பழச்சந்தையில் திடீர் மின் தடை ரூ.2 கோடி வியாபாரம் பாதிப்பு
-
மின் தடையை கண்டித்து புதுவண்ணையில் மறியல்