சோலார் விழிப்புணர்வு முகாம்
தேனி: தேனியில் மின்வாரியம் சார்பில் வீடுகளில் சோலார் பேனல் பொருத்துவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி எடுத்துரைக்க விழிப்புணர்வு முகாம் நடந்தது. எம்.எல்.ஏ., சபரி ஐங்கரன் தலைமை வகித்தார். மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் நடராஜன், செயற்பொறியாளர் சண்முகா முன்னிலை வகித்தனர். முகாமில் 9 தனியார் நிறுவனங்கள் பங்கேற்றனர். வீடுகள், நிறுவனங்களில் சோலார் பேனல் அமைக்கும் அளவுகள், அதன் கட்டணம், வங்கி கடன் உள்ளிட்டவை பற்றி பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது.உதவி செயற் பொறியாளர் பிரபாகரன், மின்வாரியத்தினர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் ; அமைச்சர் அருண்ராஜ்
-
சவூதி அரேபியாவில் வசிக்கும் இந்தியர்களே கவனம்; புதிய அறிவுறுத்தல்களை வெளியிட்டது தூதரகம்
-
உண்டியல் பணத்தை வாங்கிப்போடுவது மட்டுமே அறநிலையத்துறையின் வேலையாக உள்ளது; அண்ணாமலை
-
திருப்பூர் ரயில் நிலையம்: ஒரே நாளில் 27 ஆயிரம் பேர்
-
பழச்சந்தையில் திடீர் மின் தடை ரூ.2 கோடி வியாபாரம் பாதிப்பு
-
மின் தடையை கண்டித்து புதுவண்ணையில் மறியல்
Advertisement
Advertisement